×

பரமக்குடி நகராட்சி சார்பில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள்

பரமக்குடி, அக்.26: பரமக்குடி நகராட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் வரும் 27ம் தேதி முதல் நடைபெறுகிறது. ஆகையால், பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பொதுவான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள, பூங்காக்கள், நீர்நிலைகள், பராமரிப்பு பணி, திடக்கழிவு மேலாண்மை பராமரிப்பு பணி, நகராட்சி பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படைவசதி மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, அமைப்புகளை புனரமைத்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் தொடர்பான கோரிக்கைகளை வார்டு சிறப்பு கூட்டங்களில் பொது மக்கள் தெரிவிக்கலாம். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி களை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் தாமரை தெரிவித்துள்ளார்.

Tags : Paramakudi Municipality ,Paramakudi ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா