×

தொண்டி பகுதிக்கு புதிய டிரான்ஸ்பார்மர்

தொண்டி, அக்.26: தொண்டி மற்றும் எம்.ஆர்.பட்டினம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை எம்எல்ஏ துவக்கி வைத்தார். தொண்டி தர்ஹா தெரு, எம்.ஆர்.பட்டினம் பகுதியில் குறைந்தழுத்த மின் வினியோகம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருமாணிக்கம் புதிய டிரான்ஸ்பார்மர்களை துவக்கி வைத்தார். இதையடுத்து பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனர். அங்கு கழிப்பறை வசதி கோரியும் ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு, ஜவஹர் அலி கான், மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) குமாரவேல், உதவி செயற்பொறியாளர் சித்தி வினாயகமூர்த்தி, கவுன்சிலர் அஜிஸ் ரஹ்மான், திமுக நகர செயலாளர் இஸ்மத் நானா, மின்வாரிய ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thondi ,MLA ,MR Pattinam ,Thondi Darha Street, MR Pattinam ,Thiruvadana ,MLA Karumanickam ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா