×

பயன்பாட்டிற்கு வந்தது புதிய தாலுகா அலுவலகம்

வில்லிபுத்தூர், அக்.25: வில்லிபுத்தூரில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலகத்தை கடந்த மாதம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் நேற்று காலை புதிய தாலுகா அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் வில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி, தாசில்தார் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : New Taluka Office ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Taluka Office ,Villiputhur ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா