×

புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயன்

திருப்பூர், அக். 25: திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா். திருப்பூர் மாவட்டத்தில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் 38,652 மாணவிகள் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 15,970 மாணவர்களுக்கும் என மொத்தம் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியதாவது: தமிழக முதல்வா் தமிழகத்தில் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக அடித்தளமாக புதுமைப்பெண் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் புதல்வன் என்னும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாணவர்கள் கல்லூரியில் அதிக அளவில் சேர்க்கை விகிதம் அதிகமாவதற்கு வழிவகை செய்யும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகப்படுத்தும். மாணவர்கள் பாட புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும். இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர் கால தூண்களாக திகழ்வார்கள் கல்வி இடை நிற்றலை தடுக்க முடியும்.

Tags : Tiruppur ,Tiruppur district ,Department of Social Welfare and Women's Rights ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது