ஈரோடு,அக்.25: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், கோல்டன் நகரயைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 11ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மணிகண்டனை தேடி வருகின்றனர்.

