×

நாகையில் 27ம் தேதி நடக்கிறது: மயிலாடுதுறையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

மயிலாடுதுறை, அக்.25: மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் காந்த் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை வட்டம், மணக்குடி கிராமத்தில் 300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் காந்த் பார்வையிட்டு நெல் கொள்முதல் பணிகள், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விவரம், நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்பட்டுள்ள விவரம் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, இன்று வரை 822 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 494 மெட்ரிக் டன் நெல் கிடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது, 3 லாரிகள் மூலம் 60 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகர்வு செய்யும் பணிகள் நடைபெறுவதாகவும் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

Tags : Nagapattinam ,Mayiladuthurai ,Kanth ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா