×

ஜம்மு காஷ்மீரில் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களில் என்சி, ஒன்றில் பா.ஜ வெற்றி

நகர், அக்.25: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இங்கு முதல் முறையாக மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த குலாம் நபி ஆசாத் மற்றும் நசீர் அகமது ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடைந்தது. முன்னதாக 10ம் தேதி பயாஸ் அகமது மிர் மற்றும் ஷம் ஷீர் சிங் மன்ஹாஸ் ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலங்கள் முடிவடைந்தன.

இதையடுத்து 4 மாநிலங்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற வளாகத்திற்குள் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சி மூன்று மாநிலங்களவை இடங்களை வென்றது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் சவுத்ரி முகமது ரம்ஜான், சஜாத் கிச்லூ, ஷம்மி ஓபராய் தேர்வு செய்யப்பட்டனர். 4வது இடத்தில் பா.ஜ நிறுத்திய சத் சர்மா வெற்றி பெற்றார்.

Tags : NC ,BJP ,Rajya Sabha elections ,Jammu and ,Kashmir ,Nagar ,Jammu ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...