×

உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம் டேங்கர் லாரி மீது கார் மோதி பெண் உள்பட 3 பேர் சாவு: போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சந்தோஷ்(28). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இதே பகுதியை சேர்ந்த நண்பர் மணியின் மகன் பொறியாளர் சூர்யா(24) என்பவருடன் பேருந்தில் கடலூர் மாவட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள பெரியம்மா பாக்கியலட்சுமி(62) வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு நாள் தங்கி விட்டு, காரில் நேற்று காலை சந்தோஷ், சூர்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் சேலம் புறப்பட்டு சென்றனர். காரை சந்தோஷ் ஓட்டிச் சென்றுள்ளார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்னையில் இருந்து சேலத்திற்கு தார் லோடு ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின் பகுதியில் கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி சந்தோஷ், பாக்கியலட்சுமி, சூர்யா ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தால் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேம்பாலத்தில் இருந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தியபின் போக்குவரத்து சீரானது.

Tags : Ulundurpet ,Sridhar ,Seelanayakkanpatti ,Salem district ,Santosh ,Surya ,Mani ,Periamma ,Cuddalore ,Pathirikuppam ,Cuddalore district ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்