×

சாலை பணியால் இன்று முதல் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி

ராமநாதபுரம், டிச.30:  ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்பட்டு வரும்  மேம்பாலப் பணிகளில், ராமநாதபுரம் நகர் சாலையில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் காலதாமதமும், போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலை மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் இன்று முதல் ஜன.12ம் தேதி வரை போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றுப்பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : detour ,
× RELATED மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் பலி: எஸ்.பி விளக்கம்