×

விவாகரத்து மன அழுத்தத்திற்கு மத்தியில் நடிகையின் மூளையில் ரத்தக் குழாய் வீக்கம்: கண்ணீர் மல்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், தனது மூளையில் ரத்தக் குழாய் வீக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தாஷியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘தி கர்தாஷியன்ஸ்’ என்ற நிகழ்ச்சி, ஹுலு ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஏழாவது எபிசோட்டின் தொடக்க அத்தியாயம் நேற்று ஒளிபரப்பானது. அதில், கிம் கர்தாஷியன் தனது உடல்நல பாதிப்பு குறித்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனையின்போது, தனது மூளையில் சிறிய ரத்தக் குழாய் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். பரிசோதனைக்குப் பிறகு தொலைபேசியில் கண்ணீருடன் பேசிய அவர், ‘எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?’ என்று உருக்கமாகக் கேட்ட காட்சிகள் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. மூளையில் உள்ள ரத்தக் குழாயின் பலவீனமான பகுதியில் ஏற்படும் ஒரு வீக்கமே ‘மூளை ரத்தக் குழாய் வீக்கம்’ எனப்படுகிறது. இந்த வீக்கம் வெடிக்கும்பட்சத்தில் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.

இருப்பினும், கிம் கர்தாஷியனுக்கு உள்ளது போன்று சிறிய அளவிலான வீக்கங்கள் பெரும்பாலும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அவை வெடிக்கும் அபாயமும் குறைவு என்பதால், மருத்துவர்கள் தொடர் பரிசோதனைகள் மூலம் அதைக் கண்காணிப்பார்கள். தனது முன்னாள் கணவர் கான்யே வெஸ்டுடனான விவாகரத்தின்போது ஏற்பட்ட அளவற்ற மன அழுத்தமே இந்த உடல்நல பாதிப்புக்குக் காரணம் என கிம் கர்தாஷியன் கூறியுள்ளார். தற்போது அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

தனது முன்னாள் கணவர் கான்யே வெஸ்டுடனான விவாகரத்தின்போது ஏற்பட்ட அளவற்ற மன அழுத்தமே இந்த உடல்நல பாதிப்புக்குக் காரணம் என கிம் கர்தாஷியன் கூறியுள்ளார்

Tags : Los Angeles ,Kim Kardashian ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு