×

அரசு சாரா நிறுவனங்கள், சமூக வலைதள பங்காளர்கள் கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

சென்னை: சமூக வலைதள பங்காளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தையும் திறம்பட செயல்படுத்திட ஏதுவாக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள், அலோசகர்கள் அமைப்புகள், சமூக வலைதள பங்காளர்கள்.

தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் ஆகியோரிடமிருந்து கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்முனெடுப்பின் வாயிலாக மாநிலம் தழுவிய புதுமை மற்றும் நிலையான தொடர் நடைமுறைகளைக் கொண்டு கழிவு மேலாண்மையை வலுப்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் முயல்கிறது. திடகழிவு மேலாண்மையில் பங்கேற்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: மேற்குறிப்பிட்ட இணையதளம் பதிவு செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.பதிவு செய்பவர்களை . பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களாக பணிகள் வழங்குவதற்கு கருதப்படமாட்டாது.

 

Tags : Purity Tamil Nadu Institute ,Chennai ,Purity Tamil Nadu ,Tamil Nadu ,Special Project Processing Department ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!