×

குறுக்குச்சாலையில் பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மானிய கடன் வழங்கல்

ஓட்டப்பிடாரம், டிச. 30: குறுக்குச்சாலை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் மானிய கடனை ஓட்டப்பிடாரம் யூனியன் துணைசேர்மன் காசிவிஸ்வநாதன் வழங்கினார். குறுக்குச்சாலையில் செயல்படும் எஸ்.குமாரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  சங்கம் சார்பில் ஆடு வளர்ப்பு, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட பல்வேறு மானியக் கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ரூ.60 ஆயிரம் வீதம் 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.24 லட்சத்தை கூட்டுறவு சங்கத் தலைவரும், ஓட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மனுமான காசிவிஸ்வநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் சங்கர், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags : crossroads ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி