×

தம்பதிக்கு கொலை மிரட்டல்

தேவதானப்பட்டி, அக் 24: தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி தண்ணீர்தொட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார்(45).  இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வம் தரப்பினருக்கும் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியன்று சுரேஸ்குமார் வீட்டில் அன்புச்செல்வன் தரப்பினர் பட்டாசை கொளுத்தி தூக்கி எரிந்துள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட சுரேஸ்குமாரையும் அவரது மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து புகாரில் தேவதானப்பட்டி போலீசார் அன்புச்செல்வன், பாபு, பிரகாஷ், கிஷோர், சிவபாண்டி, பிரசன்னாசங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Devadhanapatti ,Suresh Kumar ,Attanampatti Thaneerthotti Street ,Anbuchelvam ,Diwali ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா