கந்தர்வகோட்டை, அக். 24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் மூலம் நெல் நடவு நடைபெற்று வருகிறது. கரும்பு தோட்டத்திற்கு களை வெட்டி வருகிறார்கள். பெய்யும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் அவர்களது தோட்டத்தில் கத்திரி செடி , தாக்காளி செடிகளும், ஆர் எஸ் பதி மர செடிகள், சவுக்கு கன்றுகள் மற்றும் தெக்கு செடிகளும் நடவு செய்கிறார்கள். இவற்றை வாங்கி செல்ல சுற்றுபுற கிராம மக்கள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு வருவதால் செடிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
