×

நிரவி கொம்யூன் பஞ்சாயத்தில் ஒரே பெயரில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

காரைக்கால், அக்.24: நிரவி கொம்யூன் பஞ்சாயத்து சரகத்தில் வீடு, கடைகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை ஒரே பெயரில் செலுத்துவதற்கு உரிய ஆவணங்களுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, புதுச்சேரி அரசு – உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி குடிநீர் கட்டணம் ஆன்லைன் மூலம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது, பல கடை மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி ஒரு பெயரிலும், குடிநீர் கட்டணம் மற்றொரு பெயரிலும் இருந்து வருவது ஆய்வின்போது தெரிய வருகிறது. அதுபோல், இரண்டு பெயர்களில் உள்ளவர்கள் தங்களது சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை ஒரே பெயரில் மாற்றம் செய்யும் விதமாக, வீடு மற்றும் கடைகளுக்கான உரிய ஆவணங்களுடன் அலுவலகத்தை அணுகி ஒரே பெயரில் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Niravi Commune Panchayat ,Karaikal ,Commissioner ,Ilamurugan ,District ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா