- திருமாலவன்
- அரியலூர்
- பெரியார் டைடல்
- சென்னை
- திருமாவளவன்
- தேன்மொழி
- அரியலூர் மாவட்டம்
- அசோக் நகரம்
- வேப்பேரி
சென்னை: பெரியார் திடலுக்கு ஆட்டோவில் வந்த போது ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட அரியலூர் பெண்ணுக்கு திருமாவளவன் முயற்சியால், ஒரு மணி நேரத்தில் பணத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் அசோக் நகரில் இருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஆட்டோவில் தனது சின்ன மாமனாருடன் வந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பையை பார்த்தபோது மாயமாகி இருந்தது. அந்த பையில் தேன்மொழில் ரூ.1.5 லட்சம் ரொக்கம் வைத்திருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த தேன்மொழி பெரியார் திடலிலேயே அழுது புலம்பினார்.
அந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், பெண் அழுவதை பார்த்து தனது காரை நிறுத்தி கேட்டுள்ளார். உடனே திருமாவளவன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தவறவிட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை மீட்டுதர கோரி உயர் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து வேப்பேரி போலீசார் பெரியார் திடலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர் இசக்கியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் ஆட்டோவின் பின் புறத்தில் இருந்த ரூ.1.5 லட்சம் எடுத்து வந்து போலீசாரிடம் வழங்கினார். இதையடுத்து பணத்ைத தவறவிட்ட 1 மணி நேரத்தில் தேன்மொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.
