சென்னை: தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் நியமிக்க நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விலங்கு நலவாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விலங்கு நலவாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பல்வேறு விலங்குகள் நலன் தொடர்பான பணிகளை சிறப்பாக செயல்படுத்தவும் மற்றும் செல்லப்பிராணிகள் பராமரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்படுத்தவும் 38 கால்நடை மருத்துவர்களும் மாத மதிப்பூதியம் ரூ.56,000 அடிப்படையில் மொத்தம் 76 இடங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு நியமிக்க ஏதுவாக தகுதியுள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய இணையதளம் www.tnawb.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை-41. தொலைபேசி எண் 044-24575701, மின்னஞ்சல் tnawb23@gmail.com என்ற முகவரிக்கு நவம்பர் 14ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
