×

அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

அஞ்சுகிராமம், அக். 24: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அமைந்துள்ள மேற்கு பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்வார்கள். அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், அன்னை வேளாங்கண்ணி நற்பணி மன்றத்தின் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அன்னை நற்பணி மன்ற தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். அழகப்பபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, அழகப்பபுரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின், நற்பணி மன்ற செயலாளர் கிறிஸ்டோபர் முத்தரசு, பொருளாளர் கிம்ஸ், ஆலோசகர் விக்டர் நவாஸ், ஆடிட்டர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மார்ட்டின் கலந்து கொண்டு ஜெபித்து, நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய பங்கு பேரவை செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் மரிய ஜார்ஜ், முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குனர் மார்ட்டின், ரோஸ் பிரேயர் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குவைத் வாழ் அழகை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், பிரின்ஸ் ரிட்டோ சிசிடிவி பதிவு காட்சிகளை பார்க்கும் டிவியை, பங்குத்தந்தை மார்ட்டின் மற்றும் அன்னை நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Tags : Alagappapuram ,Anjugramam ,Alagappapuram, Kumari district ,Annai Velankanni Charitable Foundation ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா