×

புவனகிரியில் தக்காளி ஏற்றி வந்த வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் கைது

புவனகிரி, அக். 24: புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார், கீரப்பாளையம் கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தக்காளி ஏற்றி வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டிலை கடத்தி வந்த புவனகிரியை அடுத்த வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன்(37) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bhuvanagiri ,Bhuvanagiri Police ,Sub-Inspector ,Lenin ,Keerappalayam Market Street ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்