×

பரங்கிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்: இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

புவனகிரி, அக். 24: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் கோயில் அருகே பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், ஏன் இங்கு பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெயராமன், சந்திரா ஆகிய இருவரும் தனித்தனியே பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த முருகன், பரமானந்தம், மதன்ராஜ், பிரித்திவிராஜ், சிலம்பரசன், சூர்யா, தமிழ்ச்செல்வன், செந்தமிழ்ச்செல்வன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Parangipettai ,Bhuvanagiri ,Senthamilchelvan ,Thachakkadu ,Murugan ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...