நாகோன்: லவ் ஜிஹாத், பலதார மணம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் அசாம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறுகையில்,
‘‘அசாம் சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில அரசு பல மசோதாக்களை அறிமுகப்படுத்தும். லவ் ஜிஹாத், பலதார மணம் தடை மற்றும் மாநிலத்தின் வைணவ சத்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டங்கள் அவையில் விவாதிக்கப்படும், மேலும் மசோதாக்கள் இயற்றப்பட்டவுடன், அதற்கேற்ப ஊடகங்களுக்குத் தெரிவிப்போம்’’ என்று கூறினார்.
லவ் ஜிஹாத்’ மற்றும் பலதார மணம் போன்ற நடைமுறைகளைத் தடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சர்மா பலமுறை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக மசோதா அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
