மூடப்பட்ட பூங்கா திறப்பு

சேந்தமங்கலம், நவ.30: சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலகம் அருகே, பச்சை உடையாம்பட்டி ஊராட்சி சார்பில், இரண்டு ஆண்டுக்கு முன்பு ₹25 லட்சம் மதிப்பில் அம்மா பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள மாணவ- மாணவிகள் விளையாடி வந்தனர். வாலிபர்கள் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர். பூங்காவில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடம் பூங்கா மூடப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பூங்காவை திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 8 மாதங்களாக  பூங்கா மூடப்பட்டிருந்ததால் செடி, கொடிகள்  மண்டிக்கிடந்தன. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்காவை சுத்தப்படுத்தும் பணி முடிந்து, நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.

Related Stories:

>