×

உகாண்டாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 43 பேர் பலி

கம்பாலா: உகண்டாவில் 2 பேருந்துகள் மற்றும் 2 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். வடக்கு உகாண்டாவின் முக்கிய நகரமான குலுவுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதன் பின் வந்த சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கிரியாண்டோங்கோ நகருக்கு அருகில் நடந்த இந்த விபத்தில் 43 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றது.

Tags : Uganda ,Kampala ,Kullu ,northern Uganda ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்