சியோல்: அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு அதிபர் டிரம்ப் வர உள்ள நிலையில் வட கொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தியது. குறுகிய தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணை தென் கொரியாவின் கிழக்கு கரையை நோக்கி செலுத்தப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் எந்த ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க ராணுவத்தின் ஒத்துழைப்புடன் வலுவான பதிலடி கொடுப்பதற்கு ராணுவம் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
வரும் 30ம் தேதி ஆசிய பசிபிபொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை தென் கொரியா நடத்துகிறது. ஜியாங்ஜூ நகரில் நடக்கும் மாநாட்டில் அதிபர் டிரம்ப்,சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த சூழ்நிலையில்,வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
