சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:‘‘அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர் மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து முதல்வர், 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க,ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ஒன்றிய அரசு இதற்கு அனுமதி தராமல் காலம் கடத்துவது கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக 22 % வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
