×

குடியிருப்பு, பள்ளி வளாகத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் ஜேசிபி மூலம் அகற்றம் கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம்,அக்.23: கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் காவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அதே போல் பவளத்துறை, தாமோதரன் பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சுமார் 3 அடி அளவில் சூழ்ந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பலராமன், பிடிஓக்கள் வேலு, ராஜன் பாபு உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அங்கிருந்து வெளியேற்றி ஊராட்சி மன்ற அலுவலக அருகில் பழைய பள்ளி கட்டிடத்தில் தங்க வைத்தனர். மேலும் நீர் சூழ்ந்துள்ள காரணமாக இருந்த பாண்டியன் மடுகு கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை ஜேசிபி மூலம் ஊராட்சி நிர்வாகத்தினர் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள சாலை குறுக்கே அமைக்கப்பட்ட பைப்லைன் வழியாக மழை நீர் செல்ல இயலாததால் தற்காலிகமாக சாலை துண்டிக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இந்த பணியின் போது ஊராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : JCB ,K. V. ,K. V. Rubbam ,K. ,Kavanur Municipal Union Secondary School ,Coral Sector ,Damotharan Bhat ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...