- இந்து மதம் மானியங்கள் திணைக்களம்
- வேலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணா நிர்வாகப் பணியாளர் பயிற்சிக் கல்லூரி
வேலூர், மார்ச் 12: தமிழகம் முழுவதும் சமீபத்தில் நியமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் பயிற்சி கல்லூரியில் 21 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நேரடி நியமனம் மூலம் திருக்கோயில் வருவாய் அடிப்படயைில் நிலை-1, நிலை-2, நிலை-3 திருக்ேகாயில் ெசயல் அலுவலர்களாக 30 பேர் இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்கள் அவர்களுக்காக பணியிடம் ஒதுக்கப்பட்ட கோயில்களில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 30 பேருக்கும் சென்னை கிரீன்வேஸ் சாலை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நிர்வாக பணியாளர் பயிற்சி கல்லூரியில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து 21 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியை பெறுவதற்காக உடனடியாக அந்தந்த மண்டல இணை ஆணையர்கள் 30 பேரையும் பணியில் இருந்து விடுவித்து, அவர்களது பொறுப்பை கூடுதல் பொறுப்பாக அருகில் உள்ள கோயில் செயல் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் நிலை-3 செயல் அலுவலர் அ.பிரியா, திருவண்ணாமலை டிபிஎஸ் அறக்கட்டளை நிலை-3 செயல் அலுவலர் கோ.ராகினி, திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் நிலை-2 செயல் அலுவலர் ச.புவியரசு, காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் நிலை-2 செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் நிலை-2 செயல் அலுவலர் எம்.கிருஷ்ணவேணி, தருமபுரி பாலக்கோடு பஞ்சம்பள்ளி திருமலைத்தேவர் கோயில் நிலை-4 செயல் அலுவலர் ஆர்.கீர்த்தனா, சென்னை பாடி படவேட்டம்மன் கோயில் நிலை-3 செயல் அலுவலர் செ.மோகன்குமார், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் நிலை-3 செயல் அலுவலர் கி.ராகவன் உட்பட 30 பேர் இப்பயிற்சியை பெறுகின்றனர்.
