×

குருவிகுளம் அருகே பட்டாசு வெடித்ததில் ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

திருவேங்கடம், அக்.23: குருவிகுளம் அருகே சிதம்பராபுரம் மாடசாமி கோயில்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சந்தனகுமார்(30). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்ைடச் சேர்ந்த மாரியப்பன் மகன் கரண் (24). தீபாவளியன்று கரண் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது சந்தனகுமார் வீட்டினுள் பட்டாசு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதையடுத்து சந்தனக்குமார், கரணை கண்டித்தார். ஆத்திரமடைந்த கரண், நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சந்தனகுமாரை கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குருவிகுளம் எஸ்ஐ வேல்முருகன் விசாரணை நடத்தி கரண், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் என்ற அருண்(20), பாண்டி மகன் மனோஜ்குமார் என்ற செந்தில் ஆகிய 3பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் காளிராஜை போலீசார் கைது செய்தனர். கரண், மனோஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் மனோஜ்குமார் மீது பனவடலிசத்திரம் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tags : Kuruvikulam ,Thiruvengadam ,Madasamy ,Chandanakumar ,Madasamy Koiltheru, Chitambarapuram ,Karan ,Mariyappan ,Diwali ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா