×

ஆதிதிராவிடர் உறுப்பினர்களை தரையில் அமர வைத்த சம்பவம் வாணிக்கரை ஊராட்சியில் ஒன்றிய அதிகாரிகள் விசாரணை

குஜிலியம்பாறை, டிச. 29: குஜிலியம்பாறை அருகே, ஆதிதிராவிடர் உறுப்பினர்களை தரையில் அமர வைத்த சம்பவம் தொடர்பாக, வாணிக்கரை ஊராசியில் நேற்று ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வாணிக்கரை ஊராட்சி உள்ளது. இங்கு தலைவராக பேபி என்பவரும், துணைத்தலைவராக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெருமாயி என்பவரும் உள்ளனர். மேலும் ஊராட்சியில் 3, 6வது வார்டுகளில் ஆதிதிராவிட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி துணைத்தலைவர் பெருமாயி, ஆதிதிராவிட வார்டு உறுப்பினர்கள் கலெக்டர், எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாணிக்கரை ஊராட்சியில் கூட்டம் நடக்கும்போது, ஊராட்சி தலைவர் பேபி, திட்டங்கள் குறித்து எங்களிடம் கருத்து கேட்பதோ, விவாதிப்பதோ இல்லை. கூட்டங்களில் எங்களை தரையில் அமர வைக்கின்றனர். எனவே, ஊராட்சி தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இப்புகார் மீது நடவடிக்கை இல்லாத நிலையில், துணை தலைவர் பெருமாயி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி ஊராட்சி அலுவலகம் பூட்டி இருந்த நிலையில், மேலும் ஒரு பூட்டை போட்டு முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர். அப்போது சென்ற ஒன்றிய அதிகாரிகள் 5 தினங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தனர். இதனடிப்படையில், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் நேற்று வாணிக்கரை ஊராட்சி அலுவலகம் சென்று, அங்கு 6 உறுப்பினர்களிடம் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஊராட்சியில் நடந்த பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தோம். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றனர்.

Tags : incident ,Union officials ,Adithravidar ,ground ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...