×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது: அமுதா பேட்டி!

 

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் அமுதா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.

 

Tags : Northeast ,Tamil Nadu ,Amutha ,Chennai ,Southern Region ,Meteorological Department ,South Kerala ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்