×

ஊட்டி நகர திமுக., சார்பில் காந்தலில் கிராம சபை கூட்டம்

ஊட்டி,டிச. 29: திமுக., தலைவர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து அதிமுக.,வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. ஊட்டி நகர திமுக., சார்பில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காந்தல் திருவள்ளுவர் காலனி பகுதியில் நடந்த கூட்டத்திற்கு ஊட்டி நகர செயலாளர் ஜாரஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துக் கொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில், ஊட்டி நகர நிர்வாகிகள் கார்டன் கிருஷ்ணன், ரவிந்திரன், மஞ்சுகுமார், ஸ்டேன்லி, ஜுபீர், காந்தல் சம்பத், தியாகு, பாலமுருகன், புதுமந்து கார்த்திக், பிரதாப், ராஜ் குமார், ராஜகோபால், அன்வர் கான், ரங்கநாதன், மணி, அருண் குமார், கமல், உமேஷ், கண்ணன், சிவா மகளிர் அணியை சார்ந்த கீதா,லூயிசா, பர்ணத், பிரியா, கவிதா, கண்ணகி, மகாலட்சுமி, மெட்டில்டா, சுசிலா, மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Grama Niladhari ,meeting ,Kandal ,Ooty City DMK ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...