வாசன் பிறந்த நாள் விழா

ஊட்டி,டிச.29: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வாசனின் 56வது பிறந்த நாள் விழா ஊட்டியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். ஊட்டி நகர தலைவர் ரபீக் முன்னிலை வகித்தார். முன்னதாக ஏடிசி., மற்றும் மணிக்கூண்டு பகுதியில் கொடிேயற்று நிகழ்ச்சி நடந்தது.  இந்நிகழ்ச்சியில் குந்த வட்டார தலைவர் ஈஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ், ஊட்டி நகர துணைத் தலைவர் ஜான்ராஜா, செயலாளர் கார்த்திக், பொருளாளர் பஷீர், ராமகிருஷ்ணன், சிவக்குமார், அசோக், மோகன், ராஜா அமீர், இம்ரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: