×

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளின் பாதுகாப்பு குறித்து ஆர்டிஒ ஆய்வு

பொன்னமராவதி, அக்.18: பொன்னமராவதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளின் பாதுகாப்பு குறித்து ஆர்டிஒ ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னமராவதியில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை இலுப்பூர் கோட்டாச்சியர் கோகுல்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அனுமதிபெற்றுள்ளதா, பாதுகாப்பாக உள்ளதா என்பதை பார்வையிட்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் பட்டாசு கடைகள் செயல்படவேண்டும் என கடை உரிமையாளர்களிடம் கூறினார். இதில் பொன்னமராதி தாசில்தார் சாந்தா, மண்டல துணை தாசில்தார் திருப்பதிவெங்கடாசலம், வருவாய்ஆய்வாளர் சுரேஷ்குமார், விஏஓ பச்சையப்பன் உட்படபலர் உடன் இருந்தனர்.

 

Tags : RTO ,Diwali ,Ponnamaravathi ,Ilupur ,Kotachiyar Gokulsingh ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா