- பொன்பரப்பி சிவன் கோயில்
- Jayankondam
- தேசிய நல சேவை திட்டம்
- பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி
- அரியலூர்
- சிவன் கோயில்
- பொன்பரப்பி
- சூரசமஹரம்
- பொன்பரப்பி…
ஜெயங்கொண்டம் அக்.18: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொன்பரப்பியில் உள்ள சிவன் கோயிலில் வரும் 27ம் தேதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலின் உட்பகுதியில் உழவாரப் பணி செய்தனர். முகாமிற்கு பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) சங்கர் தலைமை வகித்தார்.
செங்குந்தர் அமைப்பின் தலைவர் ரவி தங்கவேல் செயலாளர் ஓய்வு பெற்ற சிதம்பரம் ஆசிரியர், பொருளாளர் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பஞ்சாபகேசன் ஒருங்கிணைப்பில் மாணவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் பிரேம்குமார் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவன் பக்தர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
