×

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் பசுமை பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்

வேதாரண்யம், அக்.18: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிளைப்பாளர் பார்த்தசாரதி பசுமைப்பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பசுமைப் பட்டாசுகள் என்பவை பாரம்பரிய பட்டாசு, நாட்டு வெடிகள், சிவகாசி பட்டாசுகள் மற்றும் சீனா நாட்டு பட்டாசுகளை காட்டிலும் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளாகும்.

இவை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மூலம் உருவாக்கப்பட்டவை. மேலும் இவை குறைந்த மாசுபடுத்துபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய பட்டாசுகளில் உள்ள பேரியம் நைட்ரேட் போன்ற சில வேதிப்பொருட்களுக்குப் பதிலாக வேறு மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதால், இவை காற்று மாசை குறைக்கின்றன.

பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும்போது இதன் வெடிச்சத்தம் குறைவாக இருக்கும். இவை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்படும் நீரி (NEERI) அமைப்பால் உருவாக்கப்பட்டவை.ஆகவே இந்த தீபாவளியிலிருந்தாவது பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகள் வெடித்து சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

 

Tags : Diwali ,Vedaranyam ,Tamil Nadu Farmers Protection Association ,Parthasarati ,Sivakasi ,China ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா