- ஊராட்சி தலைவர் இஸ்ரேல் பிரபாகரன்
- கபடி
- பரப்பாடி
- நெல்லை
- வருடாந்திர கிராண்ட் எலக்ட்ரிக் கபடி போட்டி
- விளையாட்டு கிளப்
- நாங்குநேரி
- நெல்லை மாவட்டம்
- டிடிடிஏ நடுநிலைப் பள்ளி
- பஞ்சாயத்து
- தலைவர் இஸ்ரேல் பிரபாகரன்...
நெல்லை, அக்.18: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பரப்பாடியில் ஸ்போர்ட்ஸ் கிளப், பொதுமக்கள் இணைந்து நடத்தும் 28வது ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி நாளை (ஞாயிற்றுகிழமை) டிடிடிஏ நடுநிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை வகிக்கிறார். அருள்ராஜ் டார்வின் வரவேற்கிறார். பரப்பாடி ஊராட்சி துணைத்தலைவர் விஜி போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறார். பரப்பாடி சேகர தலைவர் சுபா மேசாக் மற்றும் கிறிஷ்டோபர் கிங் ஆகியோர் ஜெபித்து போட்டிகளை துவக்கி வைக்கின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல், ரூபி மனோகரன் எம்எல்ஏ, போலீஸ் உதவி சூப்பிரெண்டு ஜான் கென்னடி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், டாக்டர் அலெக்ஸ் எட்வர்டு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சூசை, நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் அசோகன், நாடார் மகாஜன சங்க இளைஞரணி மாநில தலைவர் மகா கிப்ட்சன், வள்ளியூர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் எட்வின் ஜோஸ், திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுடலைக்கண்ணு, கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் ஜான் ரபீந்தர், சிங்கப்பூர் தொழிலதிபர் அருண் உள்பட பலர் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4ம் பரிசு ரூ.7 ஆயிரமும், 5ம் பரிசு 4 அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், சுழற்கோப்பை மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
