×

அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். மக்களிடம் சென்று எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும்; நலத்திட்டங்கள் பற்றி மக்கள் சொல்வார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த போவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMY ,ALVA ,REELSK ,MINISTER ,SIVASANKAR ,Chennai ,Edappadi Palanisami ,INSTAGRAM REELS ,Madapadi Palanisami ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...