×

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: அமைச்சர் பேச்சு

கலசபாக்கம், டிச.29: கலசபாக்கம் அடுத்த மட்டவெட்டு கிராமத்தில் மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எம்எல்ஏ தூசி மோகன் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக் திறந்து வைத்து 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கருத்தடை செய்து கொண்ட 3 தம்பதியினருக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

வரும் பொங்கல் திருநாளை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் 7 லட்சத்து 50 ஆயிரத்து 104 குடும்பங்களுக்கு 1,627 ரேஷன் கடைகளில் ₹2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 21 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைவர். இவ்வாறு பேசினார்.

இதில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் எல்.என்.துரை, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, பிடிஓ விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் மணி அழகன், ஊராட்சித் தலைவர் சொர்ணலதா, ஊராட்சி செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு நன்றி கூறினார். செங்கம்: செங்கம் அடுத்த புதுபாளையம் ஒன்றியத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்கத்தை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மற்றும் அரசு துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுபத்ரா நன்றி கூறினார்.

Tags : Housewives ,speech ,Minister ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...