- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- சட்டப்பேரவை
- பல்லிபாளையம், நாமக்கல் மாவட்டம்
- பெரம்பலூர் மாவட்டம்
- ஈரோடு...
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நலிவடைந்த ஏழை விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகம் முறைகேடு நடந்ததை விசாரணை குழு உறுதி செய்தது. முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு அளித்த அறிக்கைப்படி அந்த மருத்துவமனைகளின் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு பதில் அளித்து பேசியதாவது: கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதல்வர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட 2 மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
