×

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

தூத்துக்குடி,அக். 17: தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பாதாளமுத்துவின் மகன் சுடலைமுத்து (18). கடந்த 6 மாதங்களாக வீட்டுக்குச் செல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்த இவர், நேற்று மதியம் அவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்துக்குள் சென்றார். பின்னர் வெளியே வருவதற்காக சுவர் ஏறி குதிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி மீது அவரது உடல் உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த தென்பாகம் போலீசார், சுடலைமுத்துவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,Sudalaimuthu ,Badalamuthu ,Anna Nagar, Thoothukudi ,George Road ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா