×

தூத்துக்குடியில் வியாபாரியை மிரட்டிய 2 பேர் கைது

ஸ்பிக்நகர், அக். 17: தூத்துக்குடி அடுத்த அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பூவெந்தசிங் மகன் பாலமுருகன். இவர், தெர்மல் நகர் அருகே உள்ள காதர் மீரான் நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையில் இருந்த போது அங்கு வந்த 2 பேர், பாலமுருகனிடம் குளிர்பானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். உடனடியாக பாலமுருகன் கொடுத்த குளிர்பானத்தை வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பாலமுருகனிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். பின்னர் இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த தெர்மல் நகர் போலீசார், கொலை மிரட்டல் விடுத்த முத்தையாபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த பேச்சியப்பன் (எ) பேச்சிமுத்து மகன் சக்தி என்ற பறவை(29), காதர்மீரான் நகர் தாயமுத்து மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி(28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களில் சக்தி என்ற பறவை பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tuticorin SPIGNAGAR, OCT ,Balamurugan ,Bhubenthasingh ,Tuthukudi ,Sivalingam ,Kadar Meeran Nagar ,Thermal Nagar ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா