×

சோழமாதேவி ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் கிராமசபை கூட்டம்

தா.பழூர், டிச. 29: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.
இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் செல்வநாதன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூசைராஜ், தமிழ்செல்வன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : village council meeting ,AIADMK ,Cholamadevi ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...