×

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தூதரக நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு தலையீட்டை தொடர்ந்து கோரி வருகிறோம். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன். மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் ஒன்றிய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது என தெரிவித்தார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Modi ,Chennai ,Katchatheevu ,Sri Lankan Navy ,India… ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்