×

அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரத்த அழுத்தமா?: சபாநாயகர் கிண்டல்

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இடது கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி கொண்டிருந்தார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளீர்கள்.

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ரத்த அழுத்தமா?” என்று பேசினார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ‘‘சிறைகளிலே சிறைவாசிகளுக்கு கையில் கட்ட அடையாளம் கொடுப்பார்கள். அதுபோல தனி அடையாளத்துடன் வந்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன்” என்று கூறினார். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK MLAs ,AIADMK MLA ,Agri Krishnamurthy ,Hour ,Speaker ,Appavu ,AIADMK ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!