×

அரசு பொறியியல் கல்லூரி ஊழியர் மர்மச்சாவு

தர்மபுரி, அக்.16: வேலூர் மாவட்டம் விசாரம் ராசாத்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சையத் சதி(54). இவர் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2 மகன்கள் உள்ளனர். சையத் சதி கல்லூரி அருகே செட்டிக்கரை பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government Engineering College ,Dharmapuri ,Syed Sati ,Visaram Rasathupuram ,Vellore district ,Dharmapuri Government Engineering College ,Syed Sati College… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா