×

ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் பலதரப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சித்தேரி ஒன்று உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த சித்தேரி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகளும் இந்த சித்தேரி நீர் பயன்பட்டு வந்தது.

இதையடுத்து சரிவர பராமரிக்காததால் சித்தேரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவை மற்றும் விவசாயத்திற்கும் ஏரி நீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சித்தேரியில் பல ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக மீன் வளர்த்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது சித்தேரியில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் உள்நாட்டு மீனவர்கள் மீன்களை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சித்தேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு, அக். 15: ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சித்தேரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் ஊராட்சியில் பலதரப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சித்தேரி ஒன்று உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த சித்தேரி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகளும் இந்த சித்தேரி நீர் பயன்பட்டு வந்தது.

இதையடுத்து சரிவர பராமரிக்காததால் சித்தேரி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவை மற்றும் விவசாயத்திற்கும் ஏரி நீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சித்தேரியில் பல ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக மீன் வளர்த்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது சித்தேரியில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் உள்நாட்டு மீனவர்கள் மீன்களை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படவும் சித்தேரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Agayathamarai ,Chitheri ,Sethiyathoppu ,Pinnalur panchayat ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...