×

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

*போலீஸ் விசாரணை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பாறை இடுக்கில் ஆண் சடலம் ஒன்று சிக்கி இருப்பதாக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனனுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், விரைந்து சென்ற எஸ்.ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக மேட்டுப்பாளையம் வந்தார்? கொலையா அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags : Mautuppalayam Bhavani River ,SINNAKAMAN ,MATHUPPALAYAM ,S. Police ,Ai Anandakumar ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!