×

திருச்சி தில்லைநகரில் சிலைகள் திருடிய 2 பேர் கைது

 

திருச்சி, அக்.14: திருச்சி தில்லைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சிலைகள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் சுதர்சன்(51). இவரது உறவினர் வீடு தில்லைநகர் 3வது கிராசில் உள்ளது. கடந்த 9ம் தேதி சுதர்சன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் அக்.11 ம்தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாமி அறையில் இருந்த 92 கிராம் மதிப்புள்ள வெள்ளி சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து முத்தரசநல்லூர் காவேரி நகரைச் சேர்ந்த விஜயராஜ் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதில் சிறுவனை திருச்சி கூர்நோக்கில் இல்லத்திலும், விஜயராஜை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Tags : Trichy Thillainagar Trichy ,Trichy, Delhi ,Sudharsan ,Thiruvarumpur Thiruvenkadam City, Trichy District ,Dillainagar ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குடியிருப்பில் அட்டகாசம் செய்த குரங்குகள்