×

திருச்சியில் அக்.17ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, அக்.14: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்.17ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அக்-2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்.17ம் தேதி வௌ்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயிகள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers' Grievance Redressal Day ,Trichy ,Redressal Day ,Day ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...