×

பக்தர்கள் தவற விட்ட பணம் ஒப்படைப்பு

 

ராமேஸ்வரம்,அக்.14: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், கோயில் உள்ளே 22 தீர்த்தங்களில் நீராடும் போது தான் கொண்டு வந்த 20 ஆயிரம் பணத்தை தவற விட்டார். அங்கு பணியில் இருந்த அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் பக்தர் தவறவிட்ட பணத்தை கண்டெடுத்து உரிய பக்தரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுரையில் இருந்து வந்த பக்தர் 21வது தீர்த்தம் பகுதியில் தவறவிட்ட ரூ.4500 பணத்தை பையுடன் எடுத்து உரிய பக்தரிடம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Tags : Rameswaram ,Uttar Pradesh ,Ramanathaswamy temple ,Lord ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா